எவ்வது துறைவது உலகம்...

எவ்வது துறைவது உலகம்.....


"எவ்வது துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது துறைவது அறிவு"


        குறள் : 426


எவ்வது - எவ்வாறு

துறைவது- வாழ்வது

உலகம்-உலகத்தினர்

உலகத்தோடு- உலகம் செல்லும் வழியில் 

அவ்வது- அவ்வாறு

துறைவது - சேர்ந்து ஒழுகுவது

அறிவு- அறிவார்ந்த செயல்



உலகம் எவ்வாறு வாழ்கிறதோ அவ்வழியில்

நாமும் சேர்ந்து ஒழுகுதல் அறிவார்ந்த செயலாகும்.

விளக்கம் :


உலகம் எவ்வாறான ஒழுக்க நெறியில்

செல்கிறதோ அவ்வழியில் நாமும் செல்வதுதான் அறிவார்ந்த செயலாகும்.

அறிவு எனப்படுவது யாதெனில்

உலக மக்கள் எத்தகைய ஒழுக்க நெறியில் தமது வாழ்க்கைப்பாதையை அமைத்துக்

கொள்கிறார்களோ அவ்வழியில்

நாமும் நடைபோட வேண்டும்.

எல்லோருக்கும் ஒருவழி எனக்கு மாற்றுவழி

என்று எதிர்த்திசையில் பயணிப்பது

அறிவார்ந்த செயலாகாது.

உலகில் நல்லவர்களும் உண்டு.

தீயவர்களும் உண்டு.

அப்படியானால் உலகம் என்று வள்ளுவர்

கூறியது இவ்விரு  திறத்தாரையுயும் 

உள்ளடக்கியதாகவே இருக்கும்.

எனினும் நல்லொழுக்க நெறியை வலியுறுத்தும் வள்ளுவர் உலகம் என்று குறிப்பிடுவது நல்லொழுக்கப் பண்பு

கொண்டவர்களை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


உலகம் மாறிக் கொண்டே இருக்கும்.

மாற்றத்திற்கு ஏற்ப நாமும் நம்மை

மாற்றிக்கொள்ள வேண்டும்.

பண்பாடு,பழக்க வழக்கம்,உணவு முறை 

உடை என்று எத்தனையோ  மாற்றங்கள்

வரலாம். அது காலத்திற்கு ஏற்ப மக்கள்

நலன் சார்ந்ததாக அனைவராலும் ஏற்றுக்

கொள்ளப்பட்டதாக இருக்கலாம்.

இப்படிப்பட்ட நெறிசார்ந்த

அறம் சார்ந்த பாதுகாப்பு சார்ந்த

உடல் நலன் சார்ந்த செயல்களில்

நாமும் உலகத்தோடு ஒத்துப் போக

வேண்டும்.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலார் "என்ற வள்ளுவர்

அதையேதான் இந்தப் பாடலிலும் வலியுறுத்துகிறார்.

அறிவு என்பது எல்லாவற்றையும்

தெரிந்து கொள்வது மட்டுமல்ல.

உலக மக்கள் நடைமுறைக்கு ஏற்ப

நம்மை மாற்றி அவர்கள் வழியில் நடப்பதும்

அறிவுதான் என்பது வள்ளுவரின்

முடிவான கருத்து.


English Couplet :


As dwells the world, so with the world to dwell

In harmony- this is to wisely live and well.


Explanation:

To live as the world lives, is wisdom.


Transliteration:

"evva thuRaivadhu ulagam ulakaththoatu

avva thuRaiva thaRivu"




Comments

Popular Posts